| குழையள், அணியள், அடிகள் என்பன அள்ஈறு. குழையாள் உண்டாள் என்பன ஆள்ஈறு. | |
‘எல்லா’ என்பது தோழன்- தோழி என்ற இரு பாலாரையும் விளிக்கும் பொதுச்சொல்லாய், எல்லாள் என்றோ எல்லான் என்றோ வாராமல் ‘எல்லா’ என்றே வருதலின், அதனைப் படர்க்கைச் சொல் ஈறுதிரிந்து விளியேற்றது என்னாது, தோழன் தோழி என்ற இரு பாலாரையும் குறிக்கும் முன்னிலைப் பெயராகவே கொள்ளுதல் வேண்டும். |
| ‘முறைப்பெயர் மருங்கின் கெழுதகை பொதுச்சொல் நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே.’ | தொல்.பொருள்.220 |
என்ற நூற்பாவின் நச்சினார்க்கினியர் உரையை நோக்குக. இவர் இதனை தோழியைக் குறிக்கும் முன்னிலைப் பெயராகவே கொண்டார். |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும்.’ | தொல்.சொல்.144 |
| ‘வினையினும் பண்பினும், நினையத்தோன்றும் ஆள்என் இறுதி ஆய்ஆ கும்மே விளிவயி னான.’ | 146 |
| ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல.’ | 149 |
| ‘ஈற்றயல் நீடும் லளக்கள் தாம் ........அளபெடை இயல்பாம்.’ | நே.சொல்.28 |
| முழுதும் | நன். 308, தொ.வி. 73 |
| ‘லளக்களின் ஈற்றயல் நீண்டு விளிக்கும்.’ | மு.வீ.பெ. 125 |