ஒத்த நூற்பாக்கள்
|
| ‘எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும்.’ | தொல்.சொல்.144 |
| ‘ஈற்றயல் நீடும் லளக்கன்தாம்.’ | நே. சொல் 28 |
| முழுதும் | நன்.310, தொ.வி 75 |
| ‘லளக்களின் ஈற்றயல் நீண்டு விளிக்கும்.’ | மு.வீ.பெ.125 |
னகர ஈற்று உயர்திணை அல்லன விளியேற்றல்
|
213. | ன-ஈற்று உயர்திணை அல்இரு பெயர்க்கண் இறுதி அழிவத னோடுஅயல் நீட்சி. | |
இது னகர ஈற்று அஃறிணைப்பெயர்க்கும் விரவுப்பெயர்க்கும் எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது. இ-ள்: னகர ஈற்று அஃறிணைப் பெயருள்ளும் விரவுப் பெயருள்ளும் சில முறையானே அலவன்- |
| ‘கொடுந்தாள் அலவகுறை யாம்ஈது இரப்பம்’ | (ஐந்.ஐம்.42) |
|
| சாத்தன்- சாத்த கேள் எனவும் ஈறுகெடுதலும், இகலன்- ‘இகலுபு, குதிக்கும் இகலா’ அலவன்- ‘கண்டல்சேர் அளைசேர் அலவா’ கலுழன்- ‘கடும்பறைக் கலுழா’ எனவும், சாத்தன்- சாத்தா, கொற்றன்- கொற்றா எனவும் | தொல்.சொல்.131 |
ஈறு கெடுதலுடனே ஈற்று அயல் நீடலும் விளி உருபாம் என்றவாறு. பிறவும் அன்ன. முன்னர் ‘விளி உருபாம்’ என்றதனை ஈண்டும் உய்த்து உரைக்க. |
|
விளக்கம |
எய்தியது- 207 ஆம் நூற்பாச்செய்தி. அவல, சாத்த என்பன இறுதி னகரம் அழிந்தன. |