சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-2269

இது சாதிப்பண்பு என்பது ‘பொருண்மை சுட்டல்’ (197- விளக்கம்) என்பதை விளக்கும் வழி உணர்த்தப் பட்டது.
 

  எவ்வுயிர்க்கண்ணும் இறைவன் உளன்- உளன்-பண்பு.
மன்னன் மாற்றோர் பாசறை உளன்- உளன்- குறிப்பு.
பொய்யர் நெஞ்சில் புனிதன் இலன்- இலன்- பண்பு.
பாசறை மன்னன் இலன்- இலன்- குறிப்பு.
 

உண்மைக்கு மறுதலைச் சொல்லும் இன்மையே; உடைமைக்கு மறுதலைச்
சொல்லும் இன்மையே ஆதலின், குழையிலன் கச்சிலன் என்பன குழையுடையன்
கச்சுடையன் என்ற உடைமைக்கு மறுதலையாகிய இன்மை எனப்படும்.

இன்மையைப் பெயர்ச் சொல்லில் குறிப்பிடுங்கால் மறுதலை எனவும்,
வினைச்சொல்லின் குறிப்பிடுங்கால் எதிர்மறை எனவும் குறித்தல் வேண்டும்.
 

  ‘மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்’

தொல்.பொருள்.659

  ‘எதிர்மறுத்து...........வேற்றுமைச் சொல்லே’

தொல்.சொல்.107

முதலியன காண்க.

மெய்வலியன்- வலியன்-பண்பு.
                    சொல்வல்லன்-வல்லன்-குறிப்பு.

வன்மை பண்பாயவழி வலியையும், குறிப்பு ஆயவழி ஒன்றனை வல்லுதலையும்
குறிக்கும்.

அன்மை- இன்மை- வன்மை- என்ற மூன்றும் ஒவ்வொன்றும் பண்பு- குறிப்பு-
என்ற இரு பொருளாக வரும்; உண்மை மாத்திரம் ஆ உண்டு என்றாற் போலும்
பொருளின் உண்மைத்தன்மை, பண்பு, குறிப்பு என்ற மூன்று பொருள் படுதல்