சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

32 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

மூவிடம்
 

166
 
தன்மை முன்னிலை படர்க்கைமூ விடனே.
இதுமேல் ‘மூவிடம்’ என்றன இவை என்கின்றது.
 
 

இ-ள்: தன்மையும் முன்னிலையும் படர்க்கையும் என்னும் இவை மூவிடம் ஆவன
என்றவாறு.

உள்ளுதல் பொருட்டாகிய படர் என்னும் உரிச்சொல் ஈண்டுப் படர்க்கை என ஈறு
திரிந்து நின்றது. 8
 

விளக்கம்
 

‘படரே உள்ளல் செலவு மாகும்’. தொல்.சொல்.340 சொல்வானும் கேட்பானுமாகிய
இருவர் கூட்டத்தும் பிறந்த சொல் அவ்விருவரிடத்தும் நில்லாது அயலானிடத்தில்
படர்தலின் படர்க்கை எனப்பட்டது. நன். விருத்தி.266
 

ஒத்த நூற்பாக்கள்:
 

 முழுதும்
மூவிடம் தன்மை முன்னிலை படர்க்கை.
முன்னிலை தன்மை படர்க்கை மூவிடனே.
நன்.266
தொ.வி.51
மு.வீ.பெ.13
 

மூவிடச் சொற்களும் பால்திணை உணர்த்துமாறு
 

167படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின்
பெறப்படும் திணைபால் அனைத்தும் ஏனை
இடத்துஅவற்று ஒருமைப் பன்மைப் பாலே.
 
 

இது முன்னர் கூறிய இடம்பற்றி நிகழும் சொற்களால் விளங்கும் பாலும் திணையும்
தொகுத்து உணர்த்துகின்றது.

இ-ள்: படர்க்கை முற்றுவினையானும் படர்க்கைப் பெயரானும் சொல்லுவான்
குறிப்பானும் இருதிணையும் பாலும் அறியப்படும்; தன்மை முன்னிலை வினைமுற்றானும்