இது வேறு முதலிய மூன்றற்கும் பால் இடங்களைக் கூறுகின்றது. இ-ள் வேறு என்பதூஉம், இன்மை என்னும் சொல்லான் உணர்த்தப்படும் இல்லை இல் என்னும் சொற்களும், உண்டு என்பதூஉம் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய வினைக்குறிப்பு முற்றுக்களாம் என்றவாறு. வரலாறு: அவன்வேறு- அவள்வேறு- அவர்வேறு- அதுவேறு- அவைவேறு- யான்வேறு- யாம்வேறு- நீவேறு- நீயிர்வேறு- எனவும், அவன்இல்லை- அவள்இல்லை- அவர் இல்லை- அதுஇல்லை- அவைஇல்லை- யான்இல்லை- யாம்இல்லை- நீஇல்லை- நீயிர்இல்லை- |