சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

352 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘புதுவதின் இயன்ற அணியன்’
 
அகம்.61
எனவும் தம்மை முடிக்கும் வினைக்கண் கிடந்த தொழிலானும் பண்பானும் குறிப்பானும் உணர்த்தித் தெரிநிலை வினையும் குறிப்பு வினையுமாய் முடிக்கும் சொல்லை விசேடித்தலும், பிறவும், பின்- பின்னர்- பின்னை- எனவும், முன் முன்னர்- முன்னை- எனவும் திரிதலும் கொள்க. 20
 

விளக்கம்
 

தொல்காப்பியனார் வினையியலில் ‘செய்து செய்யூ’ (சொல். 228) என்ற நூற்பாவில்
செய்யா என்ற வினையெச்சவாய்ப்பாடு கூறவில்லை எனினும், எழுத்தோத்தினுள்
உயிர்மயங்கியலில்,
 

  ‘செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும்
அவ்வியல் திரியாது என்மனார் புலவர்’

தொல்.222
 
என்று கூறினார் ஆதலின், செய்யா என்ற வாய்பாடு அவருக்கும் உடன்பாடாதல்
தேற்றம்.

சேனாவரையர் 228ஆம் நூற்பாஉரையில் செய்யூ என்பது செய்யா எனத்திரிந்தும்
வரும் என்று குறிப்பிட்டதனாலும், நச்சினார்க்கினியரும் செய்யூ என்பதனை அடுத்துச்
செய்யா என்பதனைத் தொல்காப்பிய நூற்பாவின் (தொல்.222) எடுத்துக்காட்டோடு
விளக்கியமையானும் இவ்வாசிரியர் தாம் எடுத்துக்கொண்ட நன்னூல்நூற்பாவினைத்
தொல்காப்பிய உரையாளர் மரபிற்கேற்பச் சிறிது மொழிமாற்றிச் ‘செய்து செய்யூச்
செய்யாச் செய்பு’ என அமைத்தார்.

செய்து- செய்யூ- செய்யா- செய்பு- செய்தென- என்பன இறந்தகாலமும், செய
என்பது நிகழ்காலமும், செயின்- செய்யிய- செய்யியர்- செய்வான்- செய்பான்-
செய்பாக்கு- என்பன எதிர்காலமும் காட்டும்.

வான்- பான்- பாக்கு- என்ற ஈறுகள் முறையே செய்வான்- செய்பான்- செய்பாக்கு-
என்பனவற்றை உணர்த்தின, சினையாகுபெயரான் என்பது.