சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-20357

தெரிகிற்பான், இயன்ற என்பனவற்றைக் குறிப்பான் விசேடித்தன.

பின் என்ற வினையெச்சமே பின்னர்- பின்னை- எனவும், முன் என்ற
வினையெச்சமே முன்னர்- முன்னை- எனவும் திரியும் என்னும் இவர்கருத்து
நச்சினார்க்கினியரைப் பின் பற்றியதே. (தொல்.சொல். 230)

செவ்வன் தெரிகிற்பான் முதலியவற்றைச் சேனாவரையர் வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’ தொல்.சொல். 457 என்ற நூற்பா உரையில் சுட்டியுள்ளார்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யிய செய்யியர் செயின்செயச் செயற்குஎன
அவ்வகை ஒன்பதும் வினைஎஞ்சு கிளவி.’

‘செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும்
அவ்வியல் திரியாது என்மனார் புலவர்.’

‘வினைஎஞ்சு கிளவியும் வேறுபல் குறிய.’

‘பின்முன் கால்நடை வழிஇடத்து என்னும்
அன்ன மரபின் காலம் கண்ணிய
என்ன கிளவியும் அவற்றுஇயல் பினவே’

‘செய்து செயச்செய்யாச் செய்யிய செய்தெனச்
செய்யு செயின்செயற்கு என்பனவும்-மொய்குழலாய்
பின்முன்பான் பாக்கும்பிறவும் வினையெச்சச்
சொல்முன் வகுத்தோர் துணிவு.’


தொல்.சொல்.228
மு.வீ.வி. 29


தொல்.222
தொல்.சொல்.457
மு.வீ.ஒ.122


தொல்.சொல்.229




 நே.சொல்.44