எனவும், | | ‘பாரி என்று ஒருவன் உளன் எனவும், விண் என்று விணைத்தது எனவும்,
‘ஓல்என்ற ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு’ எனவும், ‘பச்சென்று பசுத்தது எனவும், | | நிலன் என்று நீர் என்று தீ என்று வளிஎன்று வான் என்று பூதங்கள் ஐந்து எனவும், அவ்வாறும் வரும். | 5 | விளக்கம் | என என்று என்பன குறிப்பு இசை பண்புபற்றிய அடிச் சொற்களையும் பெயர் வினைச்சொற்களையும் அடுத்தும், எண்ணுப்பொருளிலும் வரும் என்பது. எழுக என எழுந்தாய்- ஈண்டு என என்பது வினையெச்சம். என என்று என்பன இடைச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் வரும் இடங்களைப் பொருள்நோக்கி உணர்க. | ஒத்த நூற்பாக்கள் | | ‘வினையே குறிப்பே இசையே பண்பே எண்ணே பெயரோடு அவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே எனஎன் கிளவி’
‘என்றுஎன் கிளவியும் அதனோ ரற்றே.’ முழுதும் (எண்பண்பு) நன்.
‘வினைபெயரும் எண்ணும் இசைகுறிப்பும் பண்பும் எனஎன்று இரண்டும் இயலும்’. | தொல்.சொல்.258
259 424
நே.சொல்.54 |
|
|
|