அவை ஒருவழி நின்று, வினைஎன்று எனவும்-கண்இமை என எனவும்- பொருளொடு கருவியொடு காலத்தொடுவினையொடு எனவும்- நின்ற இடத்துப் பிரிந்து பிறவழிச் சென்று ஒன்றியவாறு காண்க. ‘ஒன்று வழி உடைய’ என்றதனால் சொல்தொறும் நிற்றலே பெரும்பான்மை என்பதாம். சொல் தொறும் நின்ற எண் இக்காலத்து அரிய. 11 |
விளக்கம் |
ஓரிடத்து என்று, என, ஒடு என்ற இடைச் சொற்கள் இருந்தால் போதும். அவற்றிற்குச் சொல்தொறும் தனித் தனிக் கடைநிலை விளக்கணி போலச் சென்று சேர்ந்து பொருள் உணர்த்தும் ஆற்றல் உண்டு என்பதாம். இவ் விடைச்சொற்களை ஏலாத பெயர்களை முன்னர் வைத்து இவற்றை ஏற்ற பெயர்களை இறுதிக்கண் வைக்க; முதற் சொல்லிலோ இடையிலோ இவற்றை வைத்து ஏனைய சொற்களொடும் இயைத்துக் கொள்ளுதல் மரபு அன்று என்பதாம். |
ஒத்த நூற்பாக்கள்
|
| முழுதும் | தொல்.சொல்.294 |
| ‘என்றும் எனவும் ஒடுவும் ஒரோவழி நின்றும் பிரிந்துஎண் பொருள்தொறும் நேரும்.’ | நன். 429 |
| ‘என்றுஎன ஓடுமூன்றும் எஞ்சிடத் தனவுமாம்.’ | தொ.வி. 136 |
எண்ணிடைச் சொற்கள் வினையொடும் வருமாறு
|
262. | வினையொடு வரினும் எண்இனைய ஏற்பன. | |
இஃது எண்இடைச்சொற்கள் வினைச்சொற்கண்ணும் வரும் என்கின்றது. இ-ள்: வினையொடுவந்து நிற்பினும் எண் இடைச் சொற்கள் முற்கூறிய இயல்பினவாய்த் தொகைபெற்றும் பெறாதும் வருவனவாம் பொருந்துவன என்றவாறு. |