வரலாறு: குற்றிகொல்லோ மகன்கொல்லோ என்புழி, ஒன்றும் துணியாமையின் ஐயத்துக்கண் வந்தது. |
| ‘பிரிவு எண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர் வருவர்கொல் வயங்குஇழாய்’ | கலி.11 |
என்புழி அசைநிலையாய் வந்தது. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘கொல்லே ஐயம்’ | தொல்.சொல்.268, மு.வீ.ஒ.15 |
| முழுதும் | நன்.435 |
‘மன்ற’ இடைச்சொல்
|
270. | மன்றஎன் கிளவி தேற்றம் செய்யும். | |
இது மன்ற என்பது பொருள்படுமாறு கூறுகின்றது. இ-ள்: மன்ற என்னும் இடைச்சொல் தெளிவுப் பொருண்மையை உணர்த்தும் என்றவாறு.. |
| வரலாறு: ‘கடவுள் ஆயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே’ | நற்.34 |
எனவரும். மடவையே என்றவாறாம். 20 |
ஒத்த நூற்பாக்கள் |
| முழுதும் | தொல்.சொல்.265 |
| ‘மன்றக் கிளவி தெளிவை விளக்கும்’ | மு.வீ.ஒ.12 |
‘தஞ்சம்’ இடைச்சொல்
|
271. | தஞ்சக்கிளவி எண்மை பொருட்டே. | |
இதுவும் அது. இ-ள்: தஞ்சம் என்னும் இடைச்சொல் எளிமைப் பொருண்மையை உடைத்து. |