சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

448 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்
பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்தும் மரபின் சென்று நிலை மருங்கின்
எச்சொல் ஆயினும் பொருள்வேறு கிளத்தல்’
தொல்.சொல்.297,மு.வீ.ஒ.25

 
  ‘ஒண்பேர் வினையோடும் தோன்றி உரிச்சொலிசை
பண்பு குறிப்பால் பரந்தியலும்- எண்சேர்
பலசொல் ஒருபொருட்க ஏற்றும் ஒரு சொல்தான்
பலபொருட்கு ஏற்பவும் பட்டு’.
நே.சொல்.56

 
  ‘பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்’
நன்.442

 
  ‘மண்டலத் துப்பதி னெண்தே சிகச்சொல் வடசொலெனப்
பண்டை வழக்கொடு பாராட்டு உரிச்சொல் பல பொருட்கே
ஒண்டொடி யாய்பின் ஒருமொழி யாய்மற்று ஒரு பொருட்கே
கொண்டியல் பன்மொழி யாய்ச்சத்தி ஆற்றலும் கொண்டெழுமே’.
பி.வி.18

 
  ‘உரிச்சொல் என்ப உரியபல் குணச்சொல்
ஆதிப் பெயர்வினை அணைந்து வருமே.’
தொ.வி.138


குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் (281, 282)
தாம்பலவாய் நின்று ஒரு பொருள் உணர்த்துவன:
 

281 உறுதவ நனிஎன வரூஉம் மூன்றும்
மிகுதி செய்யும் பொருள ஆகலும்
செல்லல் இன்னல் இன்னாமை செப்பலும்
அலமரல் தெருமரல் சுழற்சி சாற்றலும்