இஃது உணராதவற்றை உணர்ந்தவை சார்த்திப் பொருள் உணர்த்துங்கால் படும் முறைமை கூறுகின்றது. இ-ள்: ஒரு சொல்லை ஒரு சொல்லால் பொருள் உணர்த்தியவழி, அப்பொருள் உணர்த்தவந்த சொற்கும் பொருள் யாது எனப் பொருட்குப் பொருள் தெரியுமாயின், மேல்வருவனவற்றிற்கு எல்லாம் ஈது ஒத்தலின் அவ்வினாஇறை வரம்பு இன்றி ஓடும்; அதனால் பொருட்குப் பொருள் தெரியற்க என்றவாறு. ஒரு சொற்குப் பொருள் உரைப்பது பிறிது ஒரு சொல்லான் அன்றே; அச்சொல் பொருளும் அறியாதானை உணர்த்துமாறு என்னை எனின், அது வருகின்ற சூத்திரத்தால் பெறப்படும். |