சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

482 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

உணர்வோர்க்குரியதோர் இயல்பு
 

293. உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே.
 

இ-ள் வெளிப்படத் தொடர்மொழி கூறியானும் பொருளைக் காட்டியானும்
உணர்த்தவும் உணராதானை உணர்த்தும் வாயில் இல்லை; உணர்ச்சியது வாயில்
உணர்வோரது உணர்வை வலியாக உடைத்து ஆகலான் என்றவாறு.

யாதானும் ஓர் ஆற்றான் உணரும் தன்மை அவற்கு இல்லையாயின் அவனை
உணர்த்தற்பாலன் அல்லன் என்பதாம். 14
 

விளக்கம்
 

  உரை சேனாவரையர் உரையே- தொல்.சொல்.393.


ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்  தொல்.சொல்.393


மொழிப் பொருட் காரணமுண்மை
 

294. மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா.
 

இது மொழிப் பொருள் உணர்த்துதற்குக் காரணம் உண்டு என்கின்றது.
இ-ள்: உறு தவ முதலாயின சொற்கு மிகுதி முதலாயின பொருள் ஆதல் வரலாற்று முறைமையால் கொள்வதல்லது, அவை அப்பொருள் ஆதற்குக் காரணம் விளங்கத் தோன்றா என்றவாறு.

பொருளொடு சொற்கு இயைபு இயற்கை ஆகலான், அவ்வியற்கை ஆகிய இயைபால் சொல் பொருள் உணர்த்தும் என்ப. ஒரு சாரார் பிற காரணத்தானும்