ஒன்று என்று துணந்தவழிச் செய்புக்கன பல அன்று ஒன்று என்றும், உருவு முதலிய ஐயப்புலப் பொதுச் சொற்கள் கூட்டியே பொருள்முடிக்க வேண்டுதலின் அவ்வாறு கூட்டி முடிப்புழி உருவு முதலாயின அல்லன் அல்லள் அன்று என்பனவற்றொடு முடியாவாம் பிற எனின், அற்றன்று; ஐயுற்ற வழி அல்லது துணிந்தவழியும் ஐயப்புலப் பொதுச்சொற்களைக் கூட்டிப் பொருள் முடிக்கவேண்டும் என்பதற்கு ஓத்து இல்லாமையான் அங்ஙனம் கூட்டி முடித்தல் ஒருதலை அன்மையான் ஏற்புழி அல்லது யாண்டும் கூட்டி முடிக்கவேண்டும் என்னும் யாப்புறவு இன்மையான் அது கடா அன்று என மறுக்க. குற்றிகொல்லோ மகன்கொல்லோ- ஆண்மகன்கொல்லோ பெண்டாட்டி கொல்லோ- என்புழி, ஐயக்கருத்துத் திணைமேலும் பால்மேலும் அன்றி மகன்உருவுகொல்லோ ஆண்மகன் உருவுகொல்லோ பெண்டாட்டி உருவுகொல்லோ என உருவின்மேற்றே ஆகலானும், பன்மையும் அஃறிணைப் பிரிப்பும் ஒருகால் சொல்லுதற்கண் ஒருபால்மேல் நில்லாது இருபால் மேல் நிற்றலானும் ஐயப்பொருள்மேல் சொல் நிகழுமாறு உணர்த்திய முகத்தான் வழுஅமைதி ஆயினவாறு காண்க. இவ்வாறு ஐயப்பொருள்மேல் சொல் நிகழ்த்துதலும் துணிந்துழி அன்மைக்கிளவி அன்மைத்தன்மையைச் சுட்டுதலும் ஆசிரியர் தொல்காப்பியனாருக்கும் கருத்தாதல் சேனாவரையர் உரையால் உணர்க. 2 |