சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

508 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இது திணைவிராய் எண்ணித் தலைமை பற்றி உயர்திணையான் முடிந்தது.
 
  ‘பழி அஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்
கொண்ட அருந்தவம் விட்டானும்- கொண்டிருந்த
இல்அஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்
நெல்உண்ட நெஞ்சிற்கோர் நோய்’
 



திரி.79
இதுவும்அது, விட்டான் என்பது உயர்திணை வாசகமாய் ஏனைப்பசுவினும் எருத்தினும் சிறந்தமையின்.
 
  ‘வேந்தன் பெரும்பதி மண்ஆள் மாந்தர்
ஈங்குஇம் மூவர் இதற்குஉரி யோரே’

 
எனவும்,
 
  ‘தன்பால் மனையாள் அயலான்தலைக் கண்டு பின்னும்
இன்மால் அடிசிற்கு இவர்கின்றகைப் பேடி போலாம்
நன்பால் பசுவே துறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பார்
என்பாரை ஓம்பேன் எனின்யான் அவன்ஆக என்றான்’
 



சீவக.443
எனவும்,
 
  ‘பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று’
 


சிலப்-21:53-55
எனவும்,
 
  ‘பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்கு
ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி எனப்படு வார்’
 



ஆசார.64
எனவும்,