சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-7,8537

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அய்மூ விடத்தும் உரிய என்ப.’

‘அவற்றுள்
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த.’
‘ஏனை இரண்டும் ஏனை இடத்த.’
‘கொடுஎன் கிளவி படர்க்கை ஆயினும்
தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பின்
தன்னிடத்து இயலும் என்மனார் புலவர்.’

‘தரல் வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை
எழுவாய் இரண்டும் எஞ்சிய ஏற்கும்.’

‘வரல் தரல் மூவிடம் வருவதற் குரிய
செலல்கொடை சேரும் படர்க்கை ஒன்றே.’



தொல்.சொல்.28



29
30


448


நன்.381. மு.வீ.ஒ.64


தொ.வி.122


முக்காலம்
 

302. வினைக்கு இட நீரது காலம் அதுதான்
இறப்புநிகழ்பு எதிர்புஎன்று ஒருமூ வகைத்தே.

 

இது ‘வழா அல்ஓம்பல்’ என மேற்கூறிப் போந்த காலமாவது இன்னது என்பதூஉம்,
இத்துணைத்து என்பதூஉம் கூறுகின்றது.