சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-40643

  ‘தொகைநிலைக் குணத்தைச் சொல்லுங் காலை
வேற்றுமை உருபு முதலிய இடைநிலை
தொகுதலின் தொகைநிலை எனப்படும் என்றும்
நிலைமொழி வருமொழி நீக்கம் இன்றி
ஈறும் முதலும் இயைந்து நின்று
விட்டிசைப் பின்றியோர் நிலைமொழி விதிபெறத்
தொகுதலின் தொகைநிலை எனப்படும் என்றும்
பலசொல் கூடியோர் சொல்லே யாகிப்
பிளவுபட்டு இசைக்கவும் பிரிக்கவும் படாமல்
ஈறும் முதலும் இவைஎனப் படாமல்
தொகுதலின் தொகைநிலை எனப்படும் என்றும்
கூறுவர் தொகாநிலை கூறுங் காலை
உருபு முதலிய இடையே உரைத்தல்
விட்டிசைத்து உரைத்தல் வெவ்வேறு உரைத்தல்
என்றே கூறுவர் இவர்மதம் மறுபடா.’
 















இ.சொ.96
என்று நூற்பா யாத்தனர்.
 

நச்சினார்க்கினியர் யாண்டும் உருபு முதலாயின தொகுதல் உண்டு என்பதை வலியுறுத்துவார். (தொல்.சொல்.412)
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய.’

‘வேற்றுமை உம்மை வினைபண்பு உவமையும்
தோற்றிய அன்மொழியும் தொக்கவிடத்து- ஏற்ற
இருசொல்லும் ஒன்றாம் இலக்கணத்தால் பல்சொல்
ஒரு சொல்லாய்ச் சேறலும் உண்டு,
‘நாமங் களில்பொருந் தும்பொருள் நற்றொகை அத்தொகைக்கண்
தாமங் கழியுமுன் சாற்றிய வேற்றுமை வேற்றுமையைச்
தொல்.சொல் 420, மு.வீ.ஒ.192



நே.சொல்.61