இஃது உரிச்சொல்பற்றி நிகழ்வதோர் ஒழிபு கூறுகின்றது. இ-ள்: உரிச்சொல் இடத்தும் வேறுபடுத்தும் சொல்லாதற்கும் உரியன உரியவாம்; எல்லாம் உரிய வாகா என்றவாறு. எனவே, உரிச்சொல்லுள் வேறுபடுத்தும் வேறுபடுக்கப்பட்டும் இரு நிலைமையும் உடையவாய் வருவன பெரும்பான்மை என்பதாம். வேறுபடுப்பன: உறு- தவ-நனி- ஏ- என்னும் தொடக்கத்தன. இரு நிலைமையும் உடையன: குரு- கெழு- செல்லல்- இன்னல்- என்னும் தொடக்கத்தன. உறுபொருள்- தவப்பல- நனிசேய்த்து- ஏகல்அடுக்கம்- என இவை ஒன்றனை விசேடித்து அல்லது வாராமையும், குருமணி, விளங்குகுரு- கேழ்கிளர் அகலம், செங்கேழ்- செல்லல் நோய், அருஞ்செல்லல்- இன்னற்குறிப்பு, பேரின்னல்- என இவை ஒன்றனை விசேடித்தும் ஒன்றனான் விசேடிக்கப்பட்டும் இருநிலைமையும் உடையவாய் வருமாறும் வழக்கும் செய்யுளும் நோக்கிக் கண்டு கொள்க. குரு விளங்கிற்று- செல்லல் தீர- எனத்தாமே நின்று வினை கொள்வன விசேடிக்கப்படும் தன்மை உடைய ஆகலின் |