இது நிறுத்த முறையானே கொண்டுகூட்டுப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது. இ-ள் செய்யுளில் பல அடிகளுள்ளும் கோவைப்பட நின்ற சொற்களைப் பொருள் தருதற்குப் பொருந்தும்படி முன் நின்ற சொல்லைப் பின்னே கொண்டு வந்தும் பின் நின்ற சொல்லை முன்னே கொண்டு போந்தும் கொளுவிப் பொருள் கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாம் என்றவாறு. எ-டு: ‘ஆலத்து மேலே குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு’ என்புழியும், |