சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-22, 2387

வரும் து ஈற்றுச்சொற்களும், ஒன்று என எண்ணப்படும் பொருள்மேல் நிற்கும் ஒன்று
என்னும் சொல்லும், அவை போல்வன பிறவும் அஃறிணை ஒருமைப்பெயர்களாம்
என்றவாறு.

வரலாறு: எது- ஏது- யாது எனவும், அது-இது- உது எனவும், அஃது- இஃது-
உஃது எனவும், குழையது புறத்தது- மூலத்தது- கோட்டது- கரியது- ஊணது எனவும்,
ஒன்று எனவும் வரும் ‘இன்னன’ என்றதனானே, பிறிது- மற்றையது- உள்ளது- இல்லது
என்றாற்போல்வன பிறவும் கொள்க. 22
 

விளக்கம்


அது இது உது, அஃது இஃது உஃது என்பன சுட்டிடைச்சொல்லை முதலாக
உடைய ஒன்றன்பாற்பெயர்.

எண்ணுப்பெயர் இயல்பாகவே எண்ணப்படும் பொருளையும் உணர்த்தும்;
எண்ணுப்பெயர் ஆகுபெயர் ஆகாது என்ற பண்டையோர் கருத்தினர் இவர்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

 
  ‘வினாச்சுட் டுடனும் வேறு மாம்பொருள்
ஆதி உறுது சுட்டணை ஆய்தம்
ஒன்றுஎன் எண் இன்னன ஒன்றன் பெயரே.’

ஒன்று துவ்வுறின்
‘துவ்விறு சுட்டொடு சுட்டணை ஆய்தமும்
யாதும் ஒன்றும் அஃறிணை ஒன்றன்
பாற்படர்க் கைப்பெயர் என்மனார் புலவர்.’
நன். 276

தொ.வி. 80


மு.வீ.பெ. 24
 

பலவின்பாற் பெயர்
 

181 முன்னர் அவ்வொடு வருவை அவ்வும்
சுட்டுஇறு வவ்வும் கள்இறு மொழியும்