முதல் வேற்றுமை-காரணக்கருத்தா, தான் தெரிகருத்தா, தான் தெரியாக்கருத்தா, கருமக்கருத்தா, தலைமைக்கருத்தா என ஐவகைப்படுங் கருத்தாக்காரகத்தை உடையது. இரண்டாம்வேற்றுமை-பற்றுக்கருமம், வீட்டுக்கருமம், இருபுறக்கருமம், தான் தெரிகருமம், தான் தெரியாக்கருமம், கருத்தாக்கருமம், தீபகக்கருமம் என எழு வகைப்படும் கருமக்காரகத்தை உடையது. மூன்றாம்வேற்றுமை- புறக்கரணம், அகக்கரணம்- என்று இருவகைப்படும் கரணக்காரகத்தை உடையது. நான்காம் வேற்றுமை- ஆர்வக்கோளி, இரப்புக்கோளி, கிடப்புக்கோளி என மூவகைப்படும் கோளிக்காரகத்தை உடையது. ஐந்தாம் வேற்றுமை- அசலம், சலம் என்ற இருவகை அவதிக்காரகத்தை உடையது. ஏழாம்வேற்றுமை- சேர்வுஆதாரம், கலப்பு ஆதாரம், புலன்ஆதாரம், அயல்ஆதாரம் என நால்வகைப்படும் ஆதாரகாரகத்தை உடையது. |