வினையாலணையும் பெயரை நீக்குதற்கு வேற்றுமை கொள்ளாது எனவும், இடைச்சொல் உரிச்சொல் என்பனவற்றை நீக்குதற்குக் காலமொடு தோன்றும் எனவும் கூறினார். வினைமுதல் நிலைகளாகிய காரகங்கள் எட்டனுள் ஏனைய காரகங்கள் தேவைப்பட்டபோது வந்து இயையும்; அவ்வாறன்றிக் காலம் என்ற காரகம் வினைச்சொல்உடன் தோன்றும். காலம் வெளிப்படையாக உணர்த்தாத வினைச் சொல்லும் குறிப்பாகவாவது காலத்தை உணர்த்தும் என்பதை விளக்க ‘நினையுங்காலை’ என்றார். விளக்கம் பெரும்பான்மையும் தொல்.சொல். 198ஆம் நூற்பாவிற்குச் சேனாவரையர் வரைந்த உரையை ஒட்டியதே. |