சூறாவளி |
| ‘பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே’ ‘நோய்மலி வருத்தம் காண்ன்மார் எமரே’ | புறம். 375 நற். 64 |
என மார் ஈறு பல்லோர் படர்க்கை ஒன்றற்கே உரித்தாய் வருதலின், அதனைத் திணைபால் இடம் எல்லாம் செல்லும் வியங்கோள் ஈறு எனக் கோடல் சிறிதும் பொருந்தாமை அறிக. ஏனையவும் இவ்வாறு வருமாறு ஓர்ந்து உணர்க. |
அமைதி |
மார்ஈறு படர்க்கைக்கண் வந்தமைக்கே இக்காலத்தில் எடுத்துக்காட்டு உண்டேனும், அதுவியங்கோள் வினையாதற்கண் இழுக்கு இன்மை அறிக. வியங்கோள் ஈறுகள் திணைபால் இடமெலாம் செல்லும் என்பதனை மிகுதி நோக்கிக் கூறியதாகக் கொள்க. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தும் மன்னா தாகும் வியங்கோட் கிளவி.’
‘கயவொடு ரவ்வொற்று ஈற்ற வியங்கோள் இயலும் இடம் பால் எங்கும் என்ப.’
‘வியங்கோள் இயலும் விகுதிக்கு அஇய யவ்வொடு ரவ்வொற்றும் இவைஎங்கும் ஏற்பன’
‘தன்மைமுன் னிலையொடு சாரா வியங்கோள்’.
‘வியங்கோள் ........ திணைபால் இடமெலாம் செல்லும் என்ப.’ |
தொல்.சொல்.226
நன். 338
தொ.வி.116 மு.வீ.வி.27
இ.கொ. 85 |