பக்கம் எண் :

326 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கொண்டது என்றால் படும் இழுக்கு இன்றேனும் ‘களவன் தான் ஒருவனுமே வேறு சிலர்
ஆண்டு இல்லை’ என்று கூறுகின்றாள், இரைதேரும் மனக்குறிப்பு உடைமையின் கேளாது,
சிறிது கேட்பினும் கொலைசூழ்குருகு ஆதலின் கூறுவதும் செய்யாது,
இத்தன்மைத்தாயதொருகுருகும் உண்டு என்று கூறுதலின், காலகுருகு என்பதனைப்
பன்மை ஒருமை வழுவமைப்பு என்றே கொள்ள வேண்டுதலான் உண்டு என்பது ஆண்டு
அஃறிணை ஒருமை உணர்த்தி நின்றது அல்லது யாண்டும் அஃறிணை ஒருமை உணர்த்தி
நிற்கும் எனக் கூற வேண்டுவது இல்லை என்க. அல்லது அங்ஙனம் கூறவேண்டிற்றேல்,
 

 

‘நாவுண்டு நீஉண்டு நாமம் தரித்துஓதப்
பாவுண்டு நெஞ்சே பயம் உண்டோ-பூஉண்டு
வண்டு உறங்கும் சோலை மதில்அரங்கத் தேஉவகை
உண்டுஉறங்கு வான்ஒருவன் உண்டு.’

‘பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
ஈண்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும்
உண்டுகொல்’ சிலப்-19:51-56

 
எனவும் வருவன முடியாமை உணர்க. 14
 

விளக்கம்
 

  ‘இன்மை செப்பல்’ என்ற தொல்காப்பியத் தொடருக்கு இல்லை- இல்- என்று
உரையாசிரியர்கள் விளக்கம் தந்ததனை உட்கொண்டு நன்னூலார் போல இல்லை
என்னாது இன்மை