பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-29441

  ‘நன்றீற்று ஏயும் அன்றீற்று ஏயும்
அந்தீற்று ஓவும் அன்னீற்று ஓவும்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்’

தொல்.சொல். 282


என்ற நூற்பாவான், நன்றே நன்றே- அன்றே அன்றே அந்தோ- அன்னோ- என்பன கொள்ளப்பட்டன.

அவனன்றே என்ற தெளிவுப்பொருளும், அதோஅதோ, அச்சோ அச்சோ, ஒக்கும்
ஒக்கும் என்பனவும் அந்நூற்பாவுரையுள் சேனாவரையரான் கொள்ளப்பட்டன.

அன்னா- இரக்கக் குறிப்புணர்த்துதல் நச்சினார்க்கினியரால் கொள்ளப்பட்டது.
(284) அஆ- என்பது இரக்கக் குறிப்புணர்த்தலும் அவர் கூறியதே (284).

அக்கொற்றன்- அவன்- என்பனவற்றில் அகரமும் ஆங்கு- ஈங்கு- என்பனபற்றில் ஆகாரமும், ஈகாரமும், யாவன்- எப்பொருள்- உண்கா- எவன்- என்பனவற்றில் பா-என்பதும் எகரமும் ஆகாரமும் இடைச்சொற்களாய்ச் சுட்டுப்பொருளும் வினாப் பொருளும் உணர்த்தின.
 

  ‘அசைநிலைக் கிளவி ஆகுவழி அறிதல்’

தொல்.சொல். 271


என்ற நூற்பா உரையை உட்கொண்டு ஆர் என்ற அசைச் சொல் பற்றி உரைத்தார்.
 

  ‘எண்ஏ காரம் இடையிட்டுக் கொளினும்
எண்ணுக் குறித்தியலும் என்மனார் புலவர்’

தொல்.சொல். 288


என்பதனை உட்கொண்டு எண்ஏகாரம் பற்றிய எடுத்துக்காட்டுக்கள் தரப்பட்டுள்ளன.