பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-1445

ஒரு சொல் பல பொருட்கு உரித்தாதலும், பலசொல் ஒரு பொருட்கு
உரியவாதலும் உரிச்சொற்கும் உண்டு எனினும், அச்செய்தி உரிச்சொல் வகை
உணர்த்தப் பயன்படுமன்றி உரிச்சொல் இலக்கணம் ஆகாது.

கறுப்ப சிவப்பு என்பன பெயர்போல வழங்குவன.

உறு- வினைப்பகுதி போலவும், தவ- வினையெச்சம் போலவும் உள்ளன.

துவைத்தல், சிலைத்தல்- என்ற தொழிற்பெயர்களின் பகுதியாய்த் துவை- சிலை- என்ற உரிச்சொற்கள் நின்றன.

துவைக்கும், சிலைக்கும்- என்ற வினைச்சொற்களுக்கும் அவை பகுதிகள் ஆயின.

உறுபுகழ், நனிபேதை- உறு நனி என்பன பெயர் அடைகள் ஆயின.

நனிசொற்றான், தவச்சென்றான்- நனி, தவ என்பன வினை அடைகள் ஆயின.

உடைபோகி, புனல் சாஅய்-போகி- சாய் என்பன பெயர்களுக்கு முடிக்குஞ்
சொற்கள் ஆயின.

அணங்கிய செல்லல், புறந்தரூஉம் இன்னல்- செல்லல்- இன்னல்- என்பன வினைகளுக்கு முடிக்கும் சொற்கள் ஆயின.

உறு- தவ- முதலியன மிகுதிப் பொருட்கண் வரும் பல உரிச்சொல்.

கடி என்பது காப்பு கூர்மை முதலிய பல பொருள்களையும்,

நளி என்பது பெருமை செறிவு என்ற பல பொருள்களையும் தரும் உரிச்சொல்.