“பல வேறு வகைப்பட்ட பண்புகளையும் அறிவிப்பனவான பெயர்ச்சொல் ஆகி, ஒரு குணத்திற்கே உரியவாயும் பல குணத்திற்கே உரியவாயும் பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் தழுவிச் செய்யுட்கே நீங்காது வரும் கிழமை உடையன உரிச்சொல். உரிய சொல் யாது, அஃது உரிச்-சொல். ‘பல் வகைப் பண்பும்’ என்றது, அருகித் தொழிற் பண்பும் தழுவுதற்கு.” |
- நன். 441 மயிலை. |
“செய்யுட்கு உரியனவாய்ப் பண்புப் பொருட்கு உரிமை பூண்டன உரிச்சொல்.” |
- நன். 442. விருத்தி |
“உரிச்சொல்லாவது பொருளும் தானும் பேதமின்றி அபேதமாதற்குரிய சொல். சொல்லெல்லாம் உரிச்சொல்லேயாம். ‘பிங்கலம் முதலா நல்லோர் உரிச்சொல்லின்’ என்றார் நன்னூலார். 460.” |
பி.வி.18 உரை. |
“பொருட்குப் பண்பு உரிமை பூண்டு நிற்றலின், அதனை உணர்த்தும் சொல் உரிச்சொல் எனப்பட்டது. தொழிற் பண்பை உணர்த்தும் சொல் உரிச்சொல்லுள் அடங்கும். இந்நால்வகைச் சொற்களுள்ளும் பண்பு உணர்த்துவனவாகிய உரிச்சொற்கள் பல என்க. அற்று ஆகலின் அன்றே ஆசிரியர் சிலவற்றை எடுத்து ஓதி, ‘இவ்வாறு வருவனவும் பல உள, அவையெல்லாம் ஈண்டுக் கூறப்புகின் முடிவு பெறா’ எனக் கூறி ஒழிந்தார் என்பது.” |
சூ.வி.பக்.35. |
முத்துவீரிய நூலார் தொல்காப்பிய நூற்பாவையே வரைந்தார். |
ஒத்த நூற்பாக்கள்
|
| ‘உரிச்சொல் கிளவி விரிக்குங் காலை இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடு மாறி |