பக்கம் எண் :

462 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி
துணிவுஅழுக் காறுஅன்பு எளிமை எய்த்தல்
துன்பம் இன்பம் இளமை மூப்புஇகல்
வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம்மதம்
மறவி இனைய உடல்கொள் உயிர்க்குணம்.’
நன்,452

 
  ‘துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல்
உய்த்தல் ஆதி உடல்உயிர்த் தொழிற்குணம்.’
நன்.453

 
  ‘பல்வகை வடிவுஇரு நாற்றம் ஐவண்ணம்
அறுசுவை ஊறுஎட்டு உயிர்அல் பொருட்குணம்.’
நன்.454

வட்டம் சதுரம் முதலிய பலவகைவடிவும், நறு நாற்றம் தீ நாற்றம் என்ற இருவகை
நாற்றமும், வெண்மை செம்மை கருமை பொன்மை பசுமை என்னும் ஐந்து வண்ணமும்,
கைப்பு கார்ப்பு புளிப்பு உவர்ப்பு துவர்ப்பு தித்திப்பு என்னும் அறுவகைச்சுவையும்,
வெம்மை தண்மை மென்மை வன்மை நொய்மை சீர்மை இழுமெனல், சருச்சரை என்ற
எண்வகை ஊறும் உடையன உயிர் அல்பொருள்கள் என்றவாறு.
 

  ‘தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல்
நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல்
ஈதல் இன்னன இருபொருள் தொழிற்குணம்.’
நன்.455
தொன்னூல் விளக்கம் நன்னூலைப் பின்பற்றியுள்ளது.
   
 

தாம் ஒன்றாய் நின்று பலபொருள்
உணர்த்துவன:
 

284 வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்வும் நெடுமையும் நிலவக் காண்டலும்
தடவே பெருமையும் கோட்டமும் சாற்றலும்
கயவே பெருமையும் மென்மையும் கருதலும்
நளியே பெருமையும் செறிவும் நவிற்றலும்
இயல்புஎன மொழிப இயல்புஉணர்ந் தோரே.