இஃது உரிச்சொல்மாட்டு நிகழ்வது ஓர் ஐயம் அகற்றுகின்றது. இ-ள் இச்சொல் இப்பொருட்கு உரித்து என மேற் கூறப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றையும் அவற்றின் முன்னும் பின்னும் வரும் மொழிகளை ஆராய்ந்து அம் மொழிகளுள் தமக்குப்பொருந்தும் மொழியொடு கூட்டிப் பொருள் உணர்த்துக. அவ்வாறு உணர்த்தவே, வரலாற்று முறைமையால் தத்தமக்கு உரிய பொருள் விளங்கித் தோன்றும் என்றவாறு. இஃது என்சொல்லியவாறோ எனின், |