இவற்றுள் இகரம் நீங்கலான னகரமும் உகரமும் கெட்டுப் புணர்ந்தன என்று கோடலே ஏற்றதாம். ஆகவே, இறந்தகால இடை நிலைகளில் ‘இன்’ என்பதன் நிலை குறித்துணரத்தக்கது. ‘புக்கான்’ என்ற சொல்லில் புகு- பகுதி; ஆன்- விகுதி; பகுதி இரட்டித்து இறந்தகாலம் காட்டிற்று என்று கூறுதல் வேண்டும். இதனை, புகு+க்+ஆன்- என்று பிரித்தால் ‘க்’ இறந்தகால இடைநிலை என்று இலக்கண விளக்கம் கூறும். இனி, நட்டாள், பெற்றான் என்றவற்றிலும் நடு, பெறு என்பன பகுதிகள்; ஆன்- விகுதி: பகுதி இரட்டித்து இறந்த காலம் காட்டியது என்பாரும் உளர். தகரமும், றகரமும் இறந்தகால இடைநிலைகளாத லின், நடு+ட்+ஆன், பெறு+ற்+ஆன் என்று பிரித்து ட், ற், இரண்டும் இறந்தகால இடைநிலைகள் என்று கோடலே ஏற்றது. (க், ட், த், ற், இன் இ, ய, ன, ன், ய், அன் என்பனவும் இறந்தகால இடைநிலை என்று இலக்கணவிளக்கம் கூறும்)-6
நிகழ்கால இடைநிலைகள்:- |