பக்கம் எண் :

4 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

புனல் பணிகளதுபதி என்பவற்றைக் கூறி மக்கள்பதி என விளங்குமாறு ஒன்றும்
கூறாமையானே ‘மக்களுள்ளாளோ என்னும் ஐயம் நிகழ்ந்தது என உரைத்தல்
பொருந்துமாறு இல்லை’ என மயங்குப எனக்கருதி, அதனை விளக்கும் பொருட்டு
‘மக்களுள்ளாள்ஆதல் சிறுபான்மை ஆதலின் கூறிற்றிலர்’ எனவும் பின்னர்க்
கூறுமாற்றானும் விளங்கும். அப்பேராசிரியர் உரையை நன்கு ஆராயின், தூது-துணை-
மயில்- என்பன ஐயப்பொருள் அல்ல எனவும், உவமை எனவும், அதனான் திணை
மயங்கல் வழுவன்று எனவும், நின்றவரே ஐயப்பொருள் எனவும். அவ்வையமும்
திணைபால் இடத்தன்று’ தலைமகன் பொதுவகையான் மகள் எனக் கண்டானே அன்றிச்
சிறப்புவகையான் கண்டிலன் ஆதலின் தெய்வமகளோ மக்கள் உள்ளாளோ என
உயர்திணைப் பெண் பாலின் சிறப்புவகைக்கண்ணே எனவும் விளங்குமாதலின்
அச்செய்யுளை ஈண்டுக்காட்டல் அமையாது என்பது.

அற்றாயின், ஈண்டும் அணங்குகொல் முதலியன ஐயநிலை உவமைக்கண் வந்தன
எனக்கொண்டு திணை மயங்கல் வழுவன்று எனக் கோடும் எனின், அது பொருந்தாது;
என்னை? அணங்கு முதலியன உவமை எனக் கொள்ளின், கனங்குழை என்பது
ஐயமின்றித் தெளிந்த உவமிக்கப்படும் பொருளாய் முடிதலின் பெண்ணெனப் பொருள்
பயக்கும் கனங்குழையாகிய உவமிக்கப்படும் பொருளுக்கு அப்பொருளே பயக்கும்
மாதரென்னும் சொல் உவமை யாகாமையானும், ஏனைய உவமையாயினும் அது

"மதியு மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்”

என்னும் குறள் முதலியன போல நலம்புனைந்துரைத்தற் பாற்பட்டு அகத்திணை
யாவதல்லது ஐயமாகிய கை்கிளை ஆகாமையானே அதிகாரத்தோடு பொருந்தாமையானும்,
ஐயமாகிய கைக்கிளை ஆகாவிடின் ‘கண் இமைத்தலானும் நிலத்து அடிதோய்தலானும்
மலர் வாடலானும் தலைமகள்