மொழித்தொகைச்சொற்களுக்கு ஒள்ளிய தொடியினை உடையாள் எனப் பதவுரை கூறலானே அவையெல்லாம் அன்மொழித்தொகையாம் என யாவர்க்கும் இனிது விளங்குமாதலின் இஃது அன்மொழித்தொகை என யாண்டும் எழுதார். பாவை முதலிய ஆகுபெயர்ப் பொருளைப் பாவையுடைய எழுச்சியும் அழகும் எனப் பதவுரையுட் கூறினும், அவ்வெழுச்சியும் அழகும் அதிகாரம்- அவாய் நிலை- எச்சம்- முதலியவற்றால் வருவித்த மொழியோ அன்றி ஆகுபெயரோ என மதிநுட்பம் உடையாரும் ஐயுறுவர் ஆதலின், அதனை ஒழித்தற் பொருட்டு இஃது ஆகுபெயராம் என யாண்டும் விடாது எழுதுவர். ஆகுபெயருள்ளும் சிலவற்றை விசேடவுரையில் விரித்து எழுதலானே பொருள் விளங்கலான், பதவுரையில் ஆகுபெயர்ப் பொருளை எழுதாது இயற்பெயர்ப் பொருளையே எழுதுவர்.இங்ஙனம் தாம் கொண்ட நியமத்தால் 1081 ஆம் குறளில் கனங்குழை எனவும், 1098 ஆம் குறளில் அசையியல் எனவும், 1101 ஆம் குறளில் ஒண்டொடி எனவும், 1110 ஆம் குறளில் சேயிழை எனவும். 1114 ஆம் குறளில் மாணிழை எனவும், 1121 ஆம் குறளில் பணிமொழி எனவும், 1123 ஆம் குறளில் திருநுதல் எனவும், 1124 ஆம் குறளில் ஆயிழை எனவும், 1135 ஆம் குறளில் தொடலைக் குறுந்தொடி எனவும், 1275 ஆம் குறளில் செறிதொடி எனவும், 1329 ஆம் குறளில் ஒளியிழை எனவும் இப்பன்னிரண்டிடத்தும் வந்த அன்மொழித்தொகைகளில் கனங்குழை, தொடலைக் குறுந்தொடி என்னும் இரண்டு இடத்து மட்டும் பிறிது ஒரு கருத்தான் இலக்கணம் கூறி ஏனைப்பத்திடத்தும் பதவுரையானே அன்மொழித்தொகை என விளக்கினும், குறுந்தொடியே பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை யாகப்பெண்ணை உணர்த்தி நிற்ப அப்பெண்ணைத் தொடலை என்னும் சொல் விசேடித்து நின்றது எனக்கொள்வர் எனக்கருதி, அங்ஙனம் கொள்ளின் பொருட் சிறப்பின்மை நோக்கி அதனை ஒழித்துத் தொடலை என்பது தொடியையே விசேடித்து |