அகத்திணையியல்-நூற்பா-135                             341


 

     செலவாவது-பண்டுபோல வேண்டியவாறு நடவாது சீர்பெற நடந்து ஓர்
 இடத்துச் சேறல்.

     பயில்வாவது - செவிலி முலையிடைத் துயில் வேண்டாது
 வேறோர் இடத்துப் பயிறல்.

விளக்கம்  

     [நாற்றம் முதலியவற்றிற்கு வரைந்துள்ள உரை தொல்காப்பியப்
 பொருட்படல 114-ஆம் நூற்பாவுரையுள் நச்சினார்க்கினியர் உரைத்தனவே.

 1 நாற்றம் முதலியவற்றான் தோழி ஐயுற்று ஆராய்தல்.

 2 ஆராய்ந்து கண்ட முடிவான் ஐயம் தெளிதல்.

 3 மெய்யானும் பொய்யானும் தலைவியொடு குறிப்பால் உரையாடல்.

 4 தலைவன் ஊர் பெயர் முதலிய வினாயவழி, "இவன் யாவன்? இவன்
   உள்ளக்கருத்து யாது?" என்று ஆராய்தல்.

 5 ஆராய்ச்சியால் தலைவன் எண்ணத்தை அறிதல்.

 6 தோழியும் தலைவியும் இருந்த இடத்துத் தலைவன் வந்து
   உரையாடியவழி அவனுக்கு மறுமொழி கொடுத்தல்.

 7 தலைவனை எள்ளி நகையாடுதல்.

 8 தலைவன் தலைவியர் உள்ளக்கருத்தைத் தோழி முடிவாக உணர்தல்.]

    "நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
     செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்
     புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம்
     உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை".

தொல். பொ. 114

 எனவும்,