[பார்வதி பங்கனாய் ஏழ்கடலாய் ஏழ்உலகாய் இருக்கும் சிவபெருமானின் தில்லையை ஒத்த மான் போன்ற தலைவியின் கருத்தைஅறிந்து காலம் தாழ்க்காது நீ தந்த தழைஆடையைக் கொள்வல்.]
இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருள் என மதித்தல்:
"காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி"
"தலையாயநண்புடையார் தளர்ந்தார் உயிர் தாங்குதற்குஓர்
நிலையாக இன்றுஉளம் நின்றிலரேல்வெய்ய நீள் நெடுங்கண்
வலையால்வளைப்பு உண்டுவார்குழல்கண்ணியில் வந்துபட்ட
கலையார் விடுக்கவல் லார்விடு வார்எவர் கைப்பட்டதே".
[காமத்தில் அகப்பட்டு வருந்தினவர்களுக்குப் பாதுகாவலைத் தரும் மடல் ஏறுதலைத் தவிர வேறுசெயல் நிறைவேற்றுதற்குரிய வாய்ப்பு இல்லை.
மேம்பட்ட நட்புடையவர் தளர்ந்தவர் உயிரைத் தாங்குதற்கு உதவாராயின், கண்வலையால் வளைக்கப்பட்டுக் கூந்தலாகிய கண்ணியில் அகப்பட்ட தம் மனமாகிய கலையை விடுதலை செய்வது இயலாது. அதனை விடுவிப்பவர் யாவர்?]
பாங்கிக்கு உலகின்மேல் வைத்து உரைத்தல்:
"காய்சின வேல்அன்ன மின்இயல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுஉள்ளம் மீன்இழந் தார்வியன் தென்புலியூர் |
|
|
|