அகத்திணையியல்-நூற்பா-137                              395


 

 இதுவும் அது.

     [வெளியே மனம் பொருந்தாதவர்போல நடிப்பினும், மனத்தில் பகைமை
 இல்லாதவர் சொற்களால் அப்பகைமையின்மை விரைவில் உணரப்படும்.

     மலைபோன்று விம்மி எழும் முகிழ்முலைத் தலைவிக்கு என் உள்ளக்
 கிடக்கையைத் தெரிவித்து நான்நாளும் சிறக்குமாறு என்னிடம் ஒருபயனும்
 கருதாது தழை ஆடையைக் கையுறையாகத் தலைவிக்குப் பெற்றுச்சென்ற
 இம் மான்விழித் தோழிக்குக் கைம்மாறாகச் செய்யக்கடவது இவ்வுலகில்
 ஒன்றும் இல்லை.]

     இறைவன்தனக்குக் குறைநேர் பாங்கி இறைவிக்கு அவன் குறை
 உணர்த்தல்:

 "தாதுஏய் மலர்க்குஞ்சி அஞ்சிறை வண்டுதண் தேன்பருகித்
  தேதே எனும்தில்லை யோன்சேய் எனச்சின வேல்ஒருவர்
  மாதே புனத்திடை வாளா வருவர்வந்து யாதும்சொல்லார்
  யாதே செயத்தக் கதுமது வார்குழல் ஏந்திழையே"

                                                 திருக்கோவை 82  

 எனவும்,

     [மாதே! ஏந்திழையே! தன் மயிர்முடியில் உள்ள பூக்களில் வண்டு தேன்
 பருகி முரலும் தில்லையான் மகனான முருகனைப்போல, வேல் ஏந்திய
 தலைவன் ஒருவன் நம்புனத்திடை வந்து உரையாடாது நிற்கின்றான். அவன்
 திறத்து நாம் செய்யத்தக்கது யாது?]

     இறைவி அறியாள் போன்று குறியாள் கூறல்:

 "சங்கம் தருமுத்து யாம்பெற வான்கழி தான்கெழுமிப்
  பொங்கும் புனல்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுஉலவு