அகத்திணையியல்-நூற்பா-137                              397


 

 "கலைதொடக் கீண்ட கருவிஅந் தேன்பல கால்கொடுமா
  மலைதொடுத்து ஊர்ந்து வருகின்ற தால்தஞ்சை வாணன்வென்றிச்
  சிலைதொடுத் தாங்குஎழில் சேர்நுத லாய்பயில் செம்பழுக்காய்க்
  குலைதொடுத்து ஓங்குபைங் கேழ்ப்பூகம் நாகம் குழாம்கவர்ந்தே"

                                                     தஞ்சை. 128

 என்ற பாடலையும் நோக்குக.

     முசுக்கலை தீண்டியதால் விண்ட தேன்கூட்டிலிருந்து பெருக்கெடுத்த
 தேன் ஆறுபோல ஓடிப் பாக்கு நாகம் இம் மரங்களை அடித்துக்கொண்டு
 மலையிலிருந்து ஊர்ந்து வருகின்றது என்பது வெளிப்படைப் பொருள்

     தலைவன் தீண்டியதால் தன்கண் வெளிப்பட்ட காமவெள்ளம்
 பெருக்கெடுக்கவே, அப்பெருக்கில் தன் நாணம், மடம் ஆகிய பண்புகள்
 அடித்துச் செல்லப்பட்டுவிட்டன என்ற குறிப்புப்பொருள் அமைந்தவாறும்
 காண்க.)

     பாங்கி இறையோற் கண்டமை பகர்தல்:

    "வளைஅணி முன்கை வால் எயிற்று இன்னகை
     இளையர் ஆடும் தளை அவிழ் கானல்
     குறுந்துறை வினவி நின்ற
     நெடுந்தேர் அண்ணலைக் கண்டிகும் யாமே"

                                                    ஐங்குறு. 198

 எனவும்,

     [வளையலை அணிந்த முன்கைகளையும் வெள்ளியபற்களையும்
 இனியசிரிப்பையும் உடைய மகளிர் ஆடும் கடற்கரைச் சோலையில்
 நீர்த்துறையை வினவிநின்ற, பெரியதேர் ஏறிவந்த அண்ணலை யாம்
 கண்டோம்]

     பாங்கியைத் தலைவி மறைத்தல்:

 "இறவுஆர் குருகுஇனம் தங்குபைங் கானலில் இன்றுஅளவும்
  பிறவாதது ஒன்று பிறந்தது வேபெரு நீர்உலகில்