அகத்திணையியல்-நூற்பா எண்-150,151                      483


 

     காதல் மிகுதி உளப்படப் பிறவும்
     நாடும் ஊரும் இல்லும் குடியும்
     பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி
     அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ
     அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்
     ஐயச் செய்கை தாய்க்குஎதிர் மறுத்துப்
     பொய்என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்
     அவன்விலங் குறினும் களம்பெறக் காட்டினும்
     பிறன்வரைவு ஆயினும் அவன்வரைவு மறுப்பினும் ....
     வரைவுஉடன் பட்டோற் கடாவல் வேண்டினும் ...."தொல். பொ. 114

     முழுதும்-                                          ந. அ. 165

    "கரத்தல் மறுத்தல் கழறல் மெய்த்தல்என
     உரைத்தகு நால்வகை வரைவு கடாதல்."           மா. அ. 57 150

வரைவுகடாதலின் விரி

 523 வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பலும்1
     அலர்அறி வுறுத்தலும்2 தாய்அறி வுறுத்தலும்3
     வெறிஅச் சுறுத்தலும்4 பிறர்வரைவு உணர்த்தலும்5
     வரைவுஎதிர்வு உணர்த்தலும்6 வரையும் நாள் உணர்த்தலும்7
     அறிவுஅறி வுறுத்தலும்8 குறிபெயர்த்து இடுதலும்9
     பகல்வரு வானை இரவுவருக என்றலும்10
     இரவுவரு வானைப் பகல்வருக என்றலும்11
     பகலினும் இரவினும் பயின்றுவருக என்றலும்12
     பகலினும் இரவினும் அகல்இவண் என்றலும்13
     உரவோன் நாடும் ஊரும் குலனும்
     மரபும் புகழும் வாய்மையும் கூறலும்14
     ஆறுபார்த்து உற்ற அச்சம் கூறலும்15
     ஆற்றாத் தன்மை ஆற்றக் கூறலும்16
     காவல்மிக உரைத்தலும்17 காமம்மிக உரைத்தலும்18