வரைவியற் செய்தி
----
வரைவின் இலக்கணம்
528 வரைவு எனப் படுவது உரவோன் கிழத்தியைக்
குரவர் முதலோர்
கொடுப்பவும் கொடாமையும்
கரணமொடு புணரக் கடிஅயர்ந்து
கொளலே.
வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன்
வந்துழி வரையும்
அன்றே; அவ்வரைவாவது இவ்வியல்பிற்று
என இஃது
அதன் இலக்கணம்
கூறுகின்றது.
(இ-ள்) வரைவு என்று சொல்லப்படுவது, தலைமகன்
தலைமகளைக் குரவர்
முதலோர் கொடுப்பவும் கொடாது
ஒழியவும்,
வதுவைச் சடங்கொடு
பொருந்த
மணம் செய்து கோடல் என்றவாறு.
வரைவு கற்பிற்கு ஒருதலையாக வேண்டுதலின் அச்சிறப்புத்
தோன்ற
‘வரைவு
எனப்படுவது' என்றும், குரவரே
அன்றி அவரோடு ஒரு
தன்மையர்
ஆகிய
தாயத்தாரும் தாயொடு பிறத்தாரும் அவர் இல்லாதவழிச்
சான்றோரும்
தேவரும் கொடைக்கு உரிய மரபினர் ஆகலின் ‘குரவர்
முதலோர்' என்றும்,
‘கொடுப்ப' என்றும்,
‘கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துஉடன் போகிய காலை யான'
தொல். பொ. 143
என்ப ஆகலின் ‘கொடாமையும்' என்றும்,
‘கரணம் பிழைக்கின் மரணம் பயக்கும்'
என்பார் ‘கரணமொடு புணர' என்றும் கூறினார்.
67
|