புகுந்து ‘பெரிய இல்லறக் கிழத்தி
ஆவாயாக’ என்று ஒரு சேர நல்லாசி கூற,
அடுத்த மகளிர், ஒரே அறையில் தலைவியைத் தலைவனோடு கூட்டிய
இருவரும் கூடுதற்குரிய முதல்இரவிலே, வளைந்த முதுகைச் சுற்றியிருந்த
புத்தாடைக்குள் ஒடுங்கிக் கிடந்த
இடத்தில் அணுகி, அவளைத் தழுவும்
விருப்போடு தலைவன் அவள் முகத்தை மூடிக்கொண்டிருந்த ஆடையை
நீக்க அவள் அஞ்சினளாய்ப் பெருமூச்சு விட்ட பொழுது அவன் ‘உன்
உள்ளத்துப்பட்டதை மறையாது கூறு’
என்று அவளை நோக்கிக் கூற, தன்
காதணி அசைய, மனம் மிக்க உவகையை உடையளாகி, மான் போன்ற
மருண்ட பார்வையினையும், படிந்த தேனால் ஈரமான கூந்தலையும் உடைய
அவள் தனது முகத்தைத் தாழ்த்தி
விரைவாக வணங்கினாள்.
இதனுள், ‘உச்சிக் குடத்தர்... ...வதுவை நன்மணம்’ என்ற பகுதியில்
வதுவைச்
சடங்குகள் நிகழ்ந்தவாறும்,
‘பேரில் கிழத்தி ஆகஎன மாதர்ஓர்இல்
கூட்டிய’
என்ற பகுதியில் தலைவிதமர் தலைவியைத் தலைவனோடு
சேர்த்தியவாறும்
காண்க. இது களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்று.]
பறைகொளப் பணிலம் ஆர்ப்ப இறைகொளத்
தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாய்ஆ கின்றே தோழி ஆய்கழல்
செயலை வென்வேல் விடலையொடு
தொகுவளை முன்கைநம் மடந்தை நட்பே.
குறுந்.15
என்பதனுள், ‘வாயாகின்றே’ எனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமையானும்,
‘விடலை’ எனப் பாலைத்தலைவன்
பெயர் கூறினமையானும்
கொடுப்போர்
இன்றிக் காரணம் நிகழ்ந்தவாறு காண்க,
156
|