‘கொடுப்போர் ... ... காலையான.’
தொல். பொ. 143
‘மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே.’
தொல். பொ. 144
‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.’
தொல். பொ. 145
முழுதும்-- ந. அ. 171
‘வரைவு எனப் படுவது புரைதீர் கிழவோன்
உரைமலி கற்பின் உத்தமக் கிழத்தியைத்
தந்தைதாய் மாதுலன் தம்முன் தமரொடும்
முந்திய ஆசான் முதலோர் கொடுப்பக்
கரணம் வழுவாது கடிஅமைந்து கொளலே.’
மா. அ. 63
‘கொண்டுதலைக் கழிந்துழிக் கொடுப்போர் இன்றியும்
கரணம் உண்டெனக் கழறினர் புலவர்.’
மா. அ. 64
‘ஆண்டு வரையாது ஆண்டகை அவளொடு
மீண்டு வரைதலும் மேலதன் மேற்றே.’
மா. அ. 65
‘ஆராய்ந்து ஆதியின் அமைந்தஇக் கரணம்
காரா ளர்க்காம் காலமும் உளவே.’
மா. அ. 66
‘மேலோர் கரணமும் கீழோர் கரணமும்
நூல்ஓர்ந்து உரைத்த நுண்ணிய மார்க்கம்
வேற்றுமைப்பட விதித்தனர் பொய்யும் வழுவும்
தோற்றிய பின்னர் துறவுடை யோரே.’
மா.அ.
67
156
வரைவின் தொகை
529 வரைவு மலிவே அறத்தொடு நிலைஎன்று
உரைஅமை இரண்டும் வரைவிற்கு உரிய
கிளவித் தொகைஎனக் கிளந்தனர் கொளலே.
இது வரைவின் தொகை இத்துணைப் பகுதித்து என்கின்றது.
(இ-ள்) வரைவு மலிவும் அறத்தொடு நிலையும் என்கின்ற இரண்டும்
வரைவிற்கு உரிய கிளவியின் தொகை
என்று கூறினர் அறிவோர் என்றவாறு
157
|