ஒத்த நூற்பாக்கள்
முழுதும் --
ந.அ. 172
கிளந்த வரைவிற்கு உரியகிள வித்தொகை
புலம்பயில் வரைவு மலிவுஅறத் துடன்நிலை
ஆயிரண்டு என்ப அறிவுடை யோரே.
மா. அ. 68
157
வரைவுமலிவின் வகை
530 வரைவுமுயல்வு உணர்த்தல்1 வரைவுஎதிர்வு உணர்த்தல்2
வரைவுஅறிந்து மகிழ்தல்3 பரவல்கண்டு உவத்தல்4 என்று
ஒருநால் வகைத்தே வரைவு மகிழ்தல்.
இது, நிறுத்த முறையானே வரைவு மலிவு உணர்த்துவனவற்றுள் இஃது அதன் வகை இத்துணைத்து என்கின்றது.
(இ-ள்) வரைவு முயல்வு உணர்த்தல் முதலாகப் பரவல் கண்டு உவத்தல் ஈறாக நான்கு வகையினை உடைத்தாம்
வரைவு மலிதல் என்றவாறு.
158
விளக்கம்
1,
தலைவன் தலைவியை வரைந்து கோடற்கு முயலுமாற்றை உரைத்தல்.
2,
தலைவன் தமரை வரைவுபற்றிச் செலுத்தத் தலைவிதமர் வரைவிற்கு
வந்தோரை எதிர்கொண்டு வரைவிற்கு
உடன்பட்டவாற்றை உணர்த்தல்.
3,
திருமணம் விரைவில் நிகழும் என்பதனை அறிந்து தோழியும் தலைவியும்
மகிழ்தல்.
4,
தலைவி வரைவினைமனம்கொண்டு தெய்வத்தை வழிபடுதல் கண்டு
தோழியும் தலைவனும் மகிழ்தல்,
|