536இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

ஒத்த நூற்பாக்கள்


   முழுதும்--                                    ந. அ. 173


   ‘வரைவு மலிவின் வகையினை உணர்த்தின்
   வரைவு முயல்வொடு வரைவுஎதிர்வு உணர்த்தலும்
   வரைவு அறிந்து உவத்தல் வாழ்த்தல்கண்டு உவத்தலோடு
   ஈரிரண்டு எனநிகழ்த்து இயற்கைய வாகும்.

மா. அ. 69
158


வரைவுமலிவின் விரி


531   காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி
     காதலிக்கு உணர்த்தலும்1 காதலி நற்றாய்
     உள்ள மகிழ்ச்சி உள்ளலும்2 பாங்கி
     தமர்வரைவு எதிர்ந்தமை காதலிக்கு உணர்த்தலும்3
     அவள் உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தலும்4
     தலைவனைப் பாங்கி வாழ்த்தலும்5 தலைவி
     மணம்பொருட் டாக அணங்கைப் பராநிலை
     காட்டலும்6 கண்டோன் மகிழ்வும்7 என்று ஈட்டிய
     இருமூன்றும் ஒன்றும் வரைவுமலி தற்காம்
     விரிஎன விளம்பினர் மெய்உணர்ந் தோரே.

     இது வரைவு மலிதலின் விரி இத்துணைத்து என்கின்றது.

     (இ-ள்) காதலன் முலைவிலைவிடுத்தமை பாங்கி காதலிக்கு
உணர்த்தல் முதலாகக் கண்டோன் மகிழ்தல் ஈறாகத் தொகுத்த ஏழ்கிளவியும்
வரைவுமலிதற்கு உரிய விரி எனக் கூறுவர் அகப்பொருளை உணர்ந்தோர்
என்றவாறு.


விளக்கம்


1, தலைவன் தலைவிக்குப் பரிசுப்பொருள் விடுத்த செய்தியைத் தோழி
  தலைவிக்கு உணர்த்துதல்.


2, தலைவி தன் நற்றாய் எத்தகைய மகிழ்ச்சி அடைவாள் என்பதை
  நினைத்துப் பார்த்தல்.