காதலன் முலைவிலை விடுத்தமை
பாங்கி
காதலிக்கு உணர்த்தல்:
என்கடைக் கண்வரினும் யான்பிற ஏத்தா வகைஇரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் சூழ்கயிலைக்
கொன்கடைக்கண் தரும்யானைகடிந்தார்கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்இது காண்வந்து தோன்றும் முழுநிதியே.
திரு.298
எனவும்,
[என் இறுதிக் காலத்தும் தன்னையன்றிப் பிறதெய்வங்களை யான்
வழிபடாத
உறுதியான உள்ளம் பெறுமாறு
என்னிடத்தில் அருட்பார்வை
செலுத்திய
தில்லையிலுள்ள சிவபெருமானுடைய கயிலை மலையிலே
அஞ்சத்தக்க
இறுதியை நமக்கு வழங்குதற்கு நம்மை நோக்கி வந்த
யானையை ஓட்டிய
தலைவன் உன்னை மணத்தற்கு ஆம்
பரிசப்
பொருளுடன் தமரை
விடுத்துள்ளான். பரிசப்பொருள்கள் நம்வீட்டின்
முன்னிடத்தில் நிறைக்கப்பட்டுள்ளன.]
காதலி நற்றாய் உள்ள மகிழ்ச்சி உள்ளல்:
கயமா மலர்என்னும் கன்னியை வண்டுஎன்றும் காளைபல்புள்
இயமா மணம்புணர் ஈர்ந்துறை நாடர் எதிர்ந்தவர்மேல்
வயமா நடத்திய வாணன்தென் மாறை வருகுவரேல்
நயமாம் மணஅணி கண்டுயாயும் இன்புறும் நம்மினுமே.
தஞ்சை. 282
எனவும்,
[குளப்பூவாம் கன்னியை வண்டாகிய தலைவன் பல பறவை
ஒலிகளையும்
திருமணக் காலத்து முழங்கும் வாத்தியங்களாகக்கொண்டு
மணம் செய்யும்
துறைகளையுடைய தலைவன் பகைவர் மேல் யானையைச்
செலுத்திய
வாணனுடைய தென்மாறையில்
வருவானாயின்,கலந்த உறவைக்
காட்டும்
திருமண அணிகளைக் கண்டு நம்மைவிட நற்றாய் பெரிதும்
மகிழ்வாள்.]
|