அகத்திணையியல்--நூற்பா எண் 159539

பாங்கி தமர்வரைவு எதிர்ந்தமை தலைமகட்கு உரைத்தல்:


           கூர்முள் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
           நூல்அறு முத்தின் காலொடு பாறித்
           துறைதொறும் பரக்கும் தூமணிச் சேர்ப்பனை
           யானும் காதலேன் யாயும் நனி வெய்யள்
           எந்தையும் கொடீஇயர் வேண்டும்
           அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.

குறுந் 51

எனவும,

     கூர்மையான முட்களைஉடைய கழிமுள்ளியினுடைய குளிர்ந்த
மலர்கள்,கோத்தநூல் அறுபடச் சிதறும் முத்துக்களைப்போலக் காற்றால்
சிதறஅடிக்கப்பட்டுத் துறைகள் தொறும் பரவும் தூய அழகியநெய்தல்
நிலத்தலைவனையானும் விரும்புகின்றேன். அவனொடு என்மணம்
முடித்தலைத் தாயும் நயக்கிறாள். எந்தையும் அவனுக்கு என்னை
மகட்கொடுத்தற்கு விரும்புகிறான். ஊர்மக்களும் சிலர் அறிய நின்னைப்
பற்றிக் கூறும் பழமொழிகளை அவனை நின்னொடு சேர்த்தே சொல்லுவர்.]


         தலைமகள் உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தல்:

         இன்னா நெறியும் குறியிடை யீடும் இலங்குஇழையார்
         பின்னாள் இழைத்த பெருவெறி யாட்டும் பிறர்வரைவும்
         நின்ஆ குலமும் தவிர்நெஞ் சேஇனி நின்உயிரை
         அன்னார் மணமுரசு ஆர்க்கின்ற தால்நம் அருநகர்க்கே.

அம்பி. 333

எனவும,

      [நெஞ்சே! உன் இனிய உயிரைஒத்த தலைவனுடைய திருமணத்
தொடர்பான வாத்தியங்கள் நம் பெரிய இல்லத்தில் ஒலிக்கின்றன ஆதலின்,
தலைவன் குறிக்கண்வரும் தீயவழியும், குறிபிழைத்தலும், மகளிர் இழைத்த
வெறியாட்டும்,