பிறர் நம்மை வரையவருதலும், இவை காரணமாக நீ படும் வருத்தங்களும்
இனி நிகழ்தற்கு வாய்ப்பு
இல்லை; ஆதலின் வருத்தம் நீங்குக.]
தலைவனைப் பாங்கி வாழ்த்தல்:
கொண்டல்வெளுக்கும்கருங்குழலாள்மனக்கோட்டமும்நின்
வண்டுஅணி யும்தழை வாட்டமும் கண்டகண் மாலும்அந்த
விண்டுஅலர் தாமரைத் தேவியும் போல்இங்ஙன் மேவியது
கண்டன மேஇறை வாஇது வோஇன்னம் காண்பதுவே
அம்பி 334
எனவும்,
[தலைவ! கார்மேகத்தை வென்ற குழலை உடைய தலைவின்
மனவருத்ததையும் நீ கொணர்ந்த வண்டு
மொய்க்கும் தழை வாடிய
நிலையையும் அன்று கண்ட எம் கண்களால் இருவீரும் திருமாலும்
திருமகளும்
போல வீற்றிருக்கும் காட்சியைக் காணும் பேறு
பெற்றுவிட்டோம். இன்னும் இத்தகைய நற்காட்சியே
காணப்படுவது
ஆகட்டும்.]
தலைவி மணம் பொருட்டாக
அணங்கைப் பராநிலை காட்டல்:
அணங்குஅரவு அல்குல் அரிவையர் ஆரத்தன மருப்புச்
சுணங்கலர்வேங்கைத்தொடைமலைநாடதுளங்குமின்போல்
வணங்குஇடைமாதுஉன்மணம்பொருட்டாகவளைஅவிழ்பூங்
கணம்கமழ்சாரல் அணங்கைப் பராநிலை கண்டருளே.
அம்பி. 335
எனவும்,
[மகளிரின் முத்துமாலை அணிந்த தனங்களாகிய யானைத்
தந்தங்களில்
அழகுதரும் தேமலைப்போல வேங்கையின்
மலர்ந்த பூக்களால்
அமைத்த
மாலையை அணிந்த மலைநாடனே! தலைவி உன் திருமணம்
முட்டின்றி
நடைபெறப் பூக்களின் திரள் கமழும் மலைச்சாரலிலே
தெய்வத்தை வழிபடும்
பெற்றியைக் காண்பாயாக.]
|