இஃது அறத்தொடு நிலையின்வகை இத்துணைத்து என்கின்றது.
(இ-ள்) முன்னிலை மொழியும் முன்னிலைப் புறமொழியும் என
இருவகையினை உடைத்தாம், அறத்தொடுநிலை
என்றவாறு.
‘மொழி’ என்பதனை முன்னும் கூட்டுக.
160
விளக்கம்
‘காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும்
நொதுமலர் வரையும் பருவம் ஆயினும்
வரைவுஎதிர் கொள்ளாது தமர்அவண் மறுப்பினும்
அவன்ஊறு அஞ்சும் காலம் ஆயினும்
அந்நால் இடத்தும் மெய்ந்நாண் ஒரீஇ
அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே’
இறை. அக. 29
அறம் என்பது தக்கது; அறத்தொடு நிலை என்பது தக்கதனைச்
சொல்லி
நிற்றல் என்றவாறு; அல்லதூஉம்
பெண்டிர்க்கு அறம் என்பது கற்பு;
கற்பின்
தலைநிற்றல் என்பதூஉம் ஆம். (இறை. அக. 29. உரை)
முன்னிலை மொழி - நேரிடையாகக் கூறுதல்.
முன்னிலைப்புறமொழி -தாம் உரையாட வேண்டியவர் நேரில்
இருந்தும்,
அவரை அழைத்துப் பேசாது அவர்
செவி மடுக்குமாறு
செய்தியை
அறிவித்தல்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
ந.அ. 175
‘முன்உரை முன்னிலை முன்னிலைப் புறமொழி
அன்ன இருவகைத் தாம்அறத் தொடுநிலை.’
மா,அ. 71
160
|