அகத்திணையியல்--நூற்பா எண் 161543

அறத்தொடுநிலையின் விரி


533 கையறு தோழி கண்ணீர் துடைத்துழிக்
    கலுழ்தல் காரணம் கூறலும்1 தலைவன்
    தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை
    எய்தக் கூறலும்2 இகந்தமை இயம்பலும்3
    இயல்பழித்து உரைத்துழி இயல்பட மொழிதலும்4
    தெய்வம் பொறைகொளச் செல்குவம் என்றலும்5
    இல்வயின் செறித்தமை சொல்லலும்6 செவிலி
    கனைஇருள் அவன்வரக் கண்டமை கூறலும்7
    எனமுறை இறைவி இயம்பிய ஏழொடு
    எறிவளை வேற்றுமைக்கு ஏது வினாவினும்
    வெறிவிலக் கியவழி வினாவினும பாங்கி
    பூவே8 புனலே9 களிறே10 என்றுஇவை
    ஏது வாகத் தலைப்பாடு இயம்பலும்
    மின்னிடை வேற்றுமை கண்டுதாய் வினாவுழி
    முன்னிலை மொழியான் மொழிதலும் செவிலி11
    என்றுஉடன் இயம்பிய எல்லாம் களவியல்
    நின்றுழி அறத்தொடு நிற்றலின் விரியே.

    இஃது அறத்தொடுநிற்றலின் விரி இத்துணைத்து என்கின்றது.

    (இ-ள்) கையறுதோழி கண்ணீர் துடைத்துழிக் கலுழ்தல் காரணம் கூறல்
முதலாகச் செவிலி கனைஇருள் அவன் வரக் கண்டமை கூறல் ஈறாகக்
கிடந்த தலைவி கூற்றுக்கள் ஏழும், செவிலி தலைமகள் வேற்றுமைக்குக்
காரணம் கேட்பினும், தான் வெறி விலக்கியவழிக் காரணம் கேட்பினும்,
பூவும் புனலும் களிறும் ஆகிய இவை காரணமாகப் புணர்ச்சியினை
அறிவித்தலாகிய பாங்கி கூற்றுக்கள் மூன்றும், தலைமகள் வேறுபாடுகண்டு
நற்றாய் தன்னை வினாயவிடத்து முன்னிலைமொழியானே செவிலி கூறும்
கூற்றும் என்று