550இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

பால்தான் அறத்தொடு நிற்பாளேயன்றி வாயால் ஒன்றும் நிகழ்ந்ததுபற்றிக்
கூறாள் ஆதலின், அவள் கூற்றுக்கு வாய்ப்பு இன்று.


ஒத்த நூற்பாக்கள்


‘வரைவுஇடை வைத்த காலத்து வருந்தினும்
வரையா நாளிடை வந்தோன் முட்டினும்
உரைஎனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும்
தானே கூறும் காலமும் உளவே.’

தொல். பொ, 112


‘முன்னிலை அறன்எனப் படுதல்என்று இருவகைப்
புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்’

தொல். பொ. 114


‘பன்னூறு வகையினும் தன்வயின் வரூஉம்
நன்னயம் மருங்கின் நாட்டம் வேண்டலின்
துணைச்சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்
துணையோர் கருமம் ஆக லான.’

தொல். பொ. 123


‘அறத்தொடு நிற்கும் காலத் தன்றி
அறத்தியல் மரபிலள் தோழி என்ப.’

தொல். பொ. 206


‘எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல்
கூறுதல் உசாதல் ஏதீடு தலைப்பாடு
உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ
அவ்வெழு வகைய என்மனார் புலவர்’.

தொல். பொ. 207


உறுகண் ஓம்பல் தன்இயல்பு ஆகலின்
உரியது ஆகும் தோழிகண் உரனே.’

தொல். பொ. 239


‘மறுதலை இல்லா மாண்புஇயல் கிளவியின்
தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலும்
செவிலி புகழ்தலும் தோழி உணர்த்தலும்
முதுவாய்க் கட்டுவி முருகுஎன மொழிதலும்
அதுகுறித்து இனைதலும் அறனல வினவலும்