செவிலி அறத்தொடுநிற்றல்:
‘மெல்லியல் வேற்றமை கண்டுதாய் வினாவுழித்
தொல்இயல்பு உணர்ந்த தொன்மைசால் செவிலி
முன்னிலை மொழியான் மொழிதற்கும் உரியள்,’
மா, அ. 75
நற்றாய் அறத்தொடுநிற்றல்:
‘நற்றமர்க்கு அவ்வுழி நற்றாய் அறத்தொடு
நிற்றலும் உளதுஎன நிகழ்த்தினர் புலவர்.’
மா, அ. 76
‘இன்னணம் இயம்பிய எல்லாம் களவியல்
மன்னி வெளிப்படா அளவைத்து ஆகலின்
அறத்தொடு நிற்றல் அதன்வகை விரியே.’
மா, அ. 77]
அநுவாத முகத்தான்
கையறுதோழி கண்ணீர் துடைத்தலும் வரப்பெறும். அதற்குச் செய்யுள்:
வாரண மாவின் மருப்பும் பொருப்பும் மலைந்தகொங்கை
பூரணம் ஆகும் பொலங்கொடி யேபொற்பு நீஅழியும்
காரண மாஒன்று கண்டில மால்கண் கலுழ்வதுஎன்னோ
தோரண மாமறு கில்பலர் கண்டுஅலர் தூற்றுதற்கே.
அம்பி. 337
எனவும்,
[யானையின் மருப்பையும் மலையையும் வென்ற நகில்கள் வனப்பு நிரம்பப்பெற்ற பூங்கொடியே! உன்வனப்பு
அழிதற்கு ஒருகாரணமும் எமக்குப் புலப்பட்டிலது. தோரணம் கட்டப்பட்ட பெரிய தெருக்களில் உள்ளார்
பலரும் உன்னைப் பழி தூற்றுமாறு நீ கண்ணீர்உகுப்பதன் காரணம் யாது?]
தலைமகள் கலுழ்தற் காரணம் கூறல்:
பண்டு நமக்குப் பரிந்துமை ஊட்டிய பங்கயக்கை
ஒண்தொடி சோர உயங்குதல் நோக்கித் தயங்குமுது
|