அகத்திணையியல்--நூற்பா எண் 161553

தண்டலை தன்னில் தலைப்பட் டான்அத் தலைவனைநாம்
கண்டது கொண்டுஅல்ல வோஎன்றுபோலும் கலுழ்கின்றதே.


அம்பி. 338

எனவும்,

      [என் கண்களிடம் அன்பு பூண்டு அவற்றிற்குத் தாமரை போன்ற கைகள் மைதீட்டின. பழைய சிறந்த சோலையில் வந்தடைந்த தலைவனைக் கண்கள் தாம்கண்ட காரணத்தினால், அவற்றுக்கு அழகு செய்வித்த கைகள்,
தொடிசோர வாடும் நிலை ஏற்பட்டுவிட்டது. தம் தவறுநோக்கிக் கண்கள்
வருந்துகின்றன]


தலைமகன் தெய்வம் காட்டித் தெளிப்பத்
தெளிந்தமை எய்தக் கூறல்:

 


கழியார் கருங்கடல் தெய்வமும் காட்டிக் கலந்தஅன்று
மொழியா தனஇல்லைமுன் துறைவாய்முன்மொழிந்தவண்ணம்
ஒழியார் நமைஒரு நாளும்என் றேகொண்டது உள்ளமும்என்
விழியா னதுகலுழ் வான்அறி யேன்இன்று மெல்லியலே.

 

அம்பி. 339

எனவும்,

      [மெல்லியலே! உப்பங்கழிகள் பொருந்திய கரிய கடலிலே
தெய்வத்தை முன் நிறுத்தி தலைவன் என்னைக் கூடின அன்று சொல்லாத
சூளுறவு ஒன்றும் இல்லை.அங்கு மொழிந்தபடியே நம்மை ஒருநாளும்
தலைவன் பிரியான் என்று என் நெஞ்சமும் உட்கொண்டது. ஆனால் இன்று
என் விழிகள்கண்ணீர் உருக்கும் காரணம் புலப்படவில்லை.]
 

தலைமகன் இகந்தமை இயம்பல்:
 


யாரும் இல்லை தானே களவன்
தான்அவன் பொய்ப்பின் யான்எவன் செய்கோ

70